மாமனார் மீது பொய்யாக 'போக்சோ' புகார் அளித்த மருமகள் மீது வழக்கு

சென்னை: தன் குழந்தையை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்தததாக பொய் புகார் அளித்த மருமகள் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில், இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரில், 'தன் குழந்தையை, மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறப்பிட்டிருந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். புகார் அளித்த இளம்பெண்ணின் கணவர் எம்.இ., படித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இதை, அவரது தந்தை கண்டித்துள்ளார்.
இதனால், தந்தையை பழிவாங்க நினைத்த மகன், மனைவி வழியாக பாலியல் வன்கொடுமை என, பொய் புகார் அளிக்க வைத்தது தெரியவந்தது.இதையடுத்து, உண்மைக்கு புறம்பாக புகார் அளித்த இளம்பெண் மீது, போலீசார் வழக்கு பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி, பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு - 22 (1)ன் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.









மேலும்
-
கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்
-
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
-
பாதுகாப்பு படையினர் அதிரடி : ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட 2 நக்சல் சுட்டுக்கொலை
-
டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா
-
கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
-
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு