'ஒரு சொட்டு நீரை கூட விட்டுத்தர முடியாது' பாகிஸ்தான் பிரதமர் கொக்கரிப்பு
இஸ்லாமாபாத்,:'பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய ஒரு சொட்டு தண்ணீரை கூட இந்தியா எடுக்க விட மாட்டோம்' என, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவத்திடம் பயிற்சி பெற்ற 'தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்' அமைப்பின் பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல் தாக்குதல் நடத்தினர். இதில், 26 அப்பாவி சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இது, 1960ல் இருந்து செயல்பாட்டில் இருந்த முக்கிய நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தம் சட்லஜ், பியாஸ், ராவி, சிந்து, ஜீலம், செனாப் ஆகிய ஆறு நதிகளை உள்ளடக்கியது. அதன்படி, இந்த நதிகளின், 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு கிடைத்து வந்தது.
தற்போது இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லவில்லை. பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் அந்நாடு திணறி வருகிறது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலவல் புட்டோ ஆகியோர், இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் சர்வதேச இளைஞர் தின விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:
எங்களுக்கு சேர வேண்டிய நீரை தடுத்து வைக்க நினைத்தால், அதில் ஒரு சொட்டை கூட உங்களால் பயன்படுத்த முடியாது. இதை நினைவில் வைத் துக்கொள்ளுங்கள்.
தண்ணீரை வைத்து மிரட்டினால், எங்கள் நாடு மறக்க முடியாத பாடத்தை உங்களுக்கு புகட்டும். சிந்து நதி நீர் எங்கள் உயிர்நாடி. சர்வதேச சட்டப்படி பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை பெறுவதில் அனைத்து உரிமையும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அமெரிக்கா அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறதே என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூசிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இது குறித்து அவர் கூறுகையில், ' ' இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுடனான அமெரிக்காவின் உறவு மாறவில்லை; நல்ல நிலையில் உள்ளது. இரு நாடுகளுடனும் எங்கள் துாதர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர், ' ' என்றார்.block_B

மேலும்
-
கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்
-
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
-
பாதுகாப்பு படையினர் அதிரடி : ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட 2 நக்சல் சுட்டுக்கொலை
-
டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா
-
கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
-
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு