' மாஜி' அதிபரை தொடர்ந்து மனைவியும் சிறையில் அடைப்பு

சியோல்:தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ, லஞ்சம், பங்கு மோசடி மற்றும் செல்வாக்கை தவறாக பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
கிழக்காசிய நாடான தென் கொரியாவில் கடந்தாண்டு டிச., 3ல் அப்போது அதிபராக இருந்த யூன் சுக் இயோல், ராணுவ அவசர நிலையை அறிவித்தார். எதிர்க்கட்சியினர் பார்லிமென்டை கூட்டி இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.
அதிபர் பதவியில் இருந்து இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது அவசரநிலை சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டது, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளில் அவர் ஜனவரி 15ல் கைது செய்யப்பட்டார்.
இந்நி லையில் அவரது மனைவி மீது லஞ்சம் வாங்கியது, பங்குச் சந்தை மோசடி மற்றும் செல்வாக்கை தவறாக பயன்படுத்தியது போன்ற வழக்கு விசாரணை நடந்து வந்தது. அதில் ஆதாரங்களை கலைக்கும் ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இ தையடுத்து, அவரையும் கைது செய்ய நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தனி சிறை, மேஜை, தரைவிரிப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மேலும்
-
கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்
-
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
-
பாதுகாப்பு படையினர் அதிரடி : ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட 2 நக்சல் சுட்டுக்கொலை
-
டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா
-
கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
-
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு