ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1.64 கோடி மோசடி
கோவை: கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த, 56 வயது நபர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம், இவரது போன் எண்ணை தொடர்பு கொண்ட, அனன்யா கபூர் என்ற பெண், குழு ஒன்றில் இணைத்திருப்பதாகவும், அக்குழுவில் பரிந்துரைக்கப்படும் பங்குகளை வாங்கினால், அதிக லாபம் பெறலாம் எனவும் தெரிவித்தார்.
'லிங்க்' ஒன்றை அனுப்பி, அதன் வாயிலாக முதலீடு செய்ய அறிவுறுத்தினார். இதை உண்மை என, நம்பிய கோவை நபர், பல்வேறு தவணைகளாக, ரூ.66 லட்சம் முதலீடு செய்தார். லாப பணத்தை எடுக்க முயற்சித்த போது முடியவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதே போல், கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவரிடம், ரூ.59.71 லட்சம் மற்றும் கோவை சிட்ராவை சேர்ந்த, 58 வயது பெண்ணிடம், ரூ.39.33 லட்சம் என, மொத்தம், ரூ.1.64 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
மூவரும் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். வழக்குகள் பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
-
மும்பையை மிரட்டும் கனமழை, வெள்ளம்; நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ஜார்க்கண்ட் கல்வியமைச்சர் காலமானார்
-
டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன்; கண்டிஷன் போட்ட ஹிலாரி கிளிண்டன்
-
2022ல் டிரம்ப் பதவியில் இருந்திருந்தால் போர் நடந்திருக்காது: சொல்கிறார் புடின்