நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 15) போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிலருக்கு தண்டனைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

6 மாணவியருக்கு தொல்லை



வேலுார், விநாயகபுரத்தை சேர்ந்தவர் முதியவர் வெங்கடேசன், 69. இவரது மனைவி கோடீஸ்வரி, 60. இவர், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் சமையலராக வேலை செய்து வந்தார். அதனால், விடுதிக்கு எதிரில் வீடு வாடகைக்கு எடுத்து, வெங்கடேசனும், லோகேஸ்வரியும் வசித்தனர்.



விடுதியில் தங்கியிருந்த, 11 வயது மாணவியை, 2018, செப்., 13ல் வெங்கடேசன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்தார். அதேபோல, 2018, டிச., 17ல், அதே விடுதியில் உள்ள ஐந்து மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, மாணவியர் தெரிவித்த புகாரின்படி, ஆம்பூர் மகளிர் போலீசார், போக்சோவில் வெங்கடேசனை கைது செய்தனர்.


இந்த வழக்கு, திருப்பத்துார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, முதியவர் வெங்கடேசனுக்கு, 35 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

சில்மிஷ நபருக்கு '9 ஆண்டு'



திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த படகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி தமிழரசன், 29. இவர், 2018 மே, 3ல், அப்பகுதியில், வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.



வாணியம்பாடி மகளிர் போலீசார், போக்சோவில் தமிழரசனை கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம் தமிழரசனுக்கு, 9 ஆண்டு சிறை, 30,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

வாலிபருக்கு வாழ்நாள் சிறை



திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென் னாத்தூர் அடுத்த கார்ணாம்பூண்டியை சேர்ந் தவர் அரவிந்த், 25. இவர், 2020, மார்ச் 7ம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது சிறுமியை, அங்குள்ள ஒருவரின் வீட்டின் மாடிக்கு துாக்கி சென்று, மொபைல்போனில் அச்சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல்
வன்கொடுமை செய்தார்.



பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தன் தாயி டம் தெரிவித்தார். திருவண்ணாமலை மகளிர் போலீசில், சிறுமியின் தாய் அளித்த புகாரின் படி, அரவிந்தை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, திருவண்ணா மலை போக்சோ கோர்ட்டில் நடந்தது. விசாரித்த நீதிபதி காஞ்சனா, அரவிந்திற்கு, சாகும் வரை சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தர விட்டார்.

Advertisement