டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன்; கண்டிஷன் போட்ட ஹிலாரி கிளிண்டன்

5

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என்று முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் கூறி உள்ளார்.



உலக நாடுகள் எதிர்பார்த்த ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை அலாஸ்காவில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை. விரைவில் இரு தரப்பு இடையே மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந் நிலையில், அதிபர் டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என்று முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி ஹிலாரி கூறி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:


நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நோபல் பரிசுக்கு நான் டிரம்ப் பெயரை பரிந்துரைப்பேன். ஆனால் அவர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அப்படி அவர் செய்தால் நானே அவரது (டிரம்ப்) பெயரை பரிந்துரை செய்வேன்.


போரை அவர் முடிவுக்கு கொண்டு வர இதுவே (அலாஸ்கா பேச்சு வார்த்தை) சரியான தருணம். அங்கு ஒரு குண்டு வீசும் சத்தம் கூட கேட்கக்கூடாது. போர் விவகாரத்தில் புடினுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடைத்துவிடக்கூடாது என்பதே எனது குறிக்கோள்.


இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் கூறி இருக்கிறார்.

Advertisement