2022ல் டிரம்ப் பதவியில் இருந்திருந்தால் போர் நடந்திருக்காது: சொல்கிறார் புடின்

வாஷிங்டன்: ''2022ம் ஆண்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்திருந்தால் உக்ரைன் உடனான போர் நடந்திருக்காது'' என முன்னாள் அதிபர் ஜோ பைடனை ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக சாடியுள்ளார்.
அலாஸ்காவில் உக்ரைன் விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடினும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் புடின் கூறியதாவது: இன்று அதிபர் டிரம்ப் கூறும் போது, அப்போது நான் அதிபராக இருந்திருந்தால் போர் நடந்திருக்காது, அது உண்மையிலேயே அப்படித்தான் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
உறவுகள் மேம்படும்
2022ம் ஆண்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்தால் உக்ரைன் உடனான போர் நடந்திருக்காது. அமெரிக்கா-ரஷ்யா உறவுகள் மேம்படும். நமது நாடுகள் எவ்வாறு பொதுவான எதிரிகளை எதிர்த்து போராடின என்பதை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். இந்த பாரம்பரியம் எதிர்காலத்தில் நமக்கு உதவும்.
உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் டிரம்ப் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் ஒரு தீர்வை எட்டுவதற்கு முன்பு, மோதலுக்கான அனைத்து காரணங்களும் அகற்றப்பட வேண்டும்.
2ம் கட்ட பேச்சுவார்த்தை
பரஸ்பர புரிதல் உக்ரைனுக்கு அமைதியை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். உக்ரைனில் உள்ள மோதலைத் தீர்ப்பதற்கும், ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுப்பதற்கும் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் ஒரு தொடக்கமாக அமையும்.
2ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் நடை பெறும். உக்ரைன் விவகாரத்தில் விரைவில் முடிவு எட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை
-
போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு
-
ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்