தொழிலதிபர் மகளுடன் சச்சின் மகனுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்: யார் இந்த சானியா சந்தோக்?

6

மும்பை: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனுக்கும், தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த சானியா சந்தோக் என்பவருக்கும் இரு குடும்பத்தார்கள் முன்னிலையில் ரகசிய நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பிரீமியர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் இடம்பிடித்து ஒருசில போட்டிகளில் விளையாடியிருக்கிறார். வேகப்பந்துவீச்சாளரான அர்ஜூன் இதுவரை சர்வதேச போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வானதில்லை.


@quote@25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், சானியா சந்தோக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ரகசியமாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினர் மற்றும் இரு குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனாலும் சச்சினின் குடும்பத்தினர் இதுக்குறித்த தகவலை இதுவரை பகிரவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.quote

யார் இந்த சானியா சந்தோக்?





சானியா சந்தோக், ஹோட்டல், உணவு, ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு துறைகளில் பல வணிக முயற்சிகளைக் கொண்ட ஒரு முக்கிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ரவி காய், மும்பையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி என்ற பிரபலமான ஐஸ்கிரீம் பிராண்ட் ஆகியவை இவர்களுக்குச் சொந்தமானவை.

@block_P@விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்ட சானியா சந்தோக், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "மிஸ்டர். பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி" என்ற நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பங்குதாரராக இருக்கிறார். இது செல்லப் பிராணிகளுக்கான ஒரு ஸ்பா மற்றும் ஸ்டோர் ஆகும். block_P

Advertisement