இந்தியா - சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த 3வது வட்டமேசை மாநாட்டில் உறுதி

புதுடில்லி: இந்தியா - சிங்கப்பூர் இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் - இந்தியா உறவை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் இடையிலான இருதரப்பு பேச்சு நடந்தது.
இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியால் முதல் சுற்று வட்டமேசை மாநாடு, 2022 செப்டம்பரில் டில்லியிலும், இரண்டாம் சுற்று வட்ட மேசை மாநாடு 2024 ஆகஸ்டில் சிங்கப் பூரிலும் நடந்தது.
இந்நிலையில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல் சிங்கப்பூர் அரசு சார்பில், அந்நாட்டின் துணைப் பிரதமர் கான் கிம் யோங், உள்துறை அமைச்சர் சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜோசபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சர் ஜெப்ரி சியாவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின்போது தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த சந்திப்பு, இருநாடுகளின் உறவை விரிவுப்படுத்த வழிவகுக்கும். ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில், சிங்கப்பூர் அமைச்சர்களின் ஈடுபாடு, இருநாட்டின் அரசிற்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும்' என, தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை
-
போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு
-
ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்