தெருநாய்க்கடி: தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் தெருநாய் கடித்து பாதிப்புக்குள்ளான தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய் தொல்லை விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்னையாகியுள்ளது. உச்சநீதிமன்றமே இது தொடர்பான வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.
இப்படியிருக்கையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், கடந்த ஜூலை 23ம் தேதி ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 6 பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டனர். இதில், தேசிய ப்லோர் பால் பாரா விளையாட்டு வீரர் ஜோகேந்திரா சத்ரியா,33, என்பவரின் முகத்தில் தெருநாய் கடித்து குதறியது.
இதில் பலத்த காயமடைந்த ஜோகேந்திர சத்ரியா மற்றும் 48 வயதான ஹிருகேஷ் ரானா என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், "பாதிக்கப்பட்ட இருவரும் தெருநாய் கடித்த பிறகு தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டனர். இருப்பினும், சத்ரியாவின் காயங்களின் தீவிரம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ள இடம் காரணமாக தொற்று வேகமாக பரவியது," எனக் கூறியுள்ளனர்.









மேலும்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை
-
போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு
-
ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்