டிஜிபி நியமன விவகாரம்; தலையிட ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு

மதுரை: "நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது" என புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 31ல் முடிவடைகிறது. புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை துவக்க வேண்டும்.
பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமிக்கக் கூடாது என ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆக 14) காலை விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், "தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியுள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் இன்று பகல் 2:15 மணிக்கு தெரிவிக்க வேண்டும்" என கூறி ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான், உள்துறை செயலாளரிடம் விபரம் பெற்றேன். புது டிஜிபி நியமன நடைமுறைகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது', என்றார்.
பின்னர், "இச்சூழலில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது என கூறி ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.


மேலும்
-
கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்
-
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
-
பாதுகாப்பு படையினர் அதிரடி : ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட 2 நக்சல் சுட்டுக்கொலை
-
டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா
-
கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
-
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு