பாதுகாப்பு படையினருக்கான வீர தீர விருதுகள் அறிவிப்பு

3

புதுடில்லி: நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம், விமானப்படை, கடற்படையினருக்கு வீர தீர செயல்களுக்கான வீர் சக்ரா விருது, வாயு சேனா பதக்கம், கீர்த்தி சக்ரா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
1brநாட்டின் சுதந்தர தின விழா நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாட்டை பாதுகாக்கும் வகையில் வீர தீர செயல்களை புரிந்த பாதுகாப்பு படையினருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சர்வோத்தம் யுத்த சேவா பதக்கம்


ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பணியாற்றிய வடக்கு பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் ஷர்மா மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய்( பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்து நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தவர்) ஆகியோருக்கு சர்வோத்தம் யுத்த சேவா விருது அறிவிக்கப்பட்டது.


அதேபோல், விமானப்படை துணை தளபதி நர்நதேஸ்வர் திவாரி, மேற்கு பிராந்திய ஏர் கமாண்டர் ஜிதேந்திர மிஸ்ரா, விமானப்படையின் வான் நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் அவாதேஸ் பாரதி ஆகியோரும் சர்வோத்தம் யுத்த சேவா பதக்கம் பெறுகின்றனர்.


'ஆப்பரேஷன் சிந்தூர்' பணிக்காக கடற்படை மேற்கு பிராந்திய முன்னாள் கமாண்டர் எஸ்ஜே சிங்கும் இந்த விருதை பெறுகிறார்.


கடற்படை துணைத்தலைவர் தருண் சோப்டிக்கு உத்தம் யுத் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத் சேவா பதக்கம்



மேஜர் ஜெனரல் சந்தீப் சுதர்சன் சார்தா

பிரிகேடியர் ராஜேஸ் நாயர்

பிரிகேடியர் விவேக் கோயல்

பிரிகேடியர் சோனேந்தர் சிங்

பிரிகேடியர் விவேக் புரி

பிரிகேடியர் முதித் மஹாஜன்

சுபேதார் வினோத் குமார்

நாயிப் சுபேதார் ரத்னேஸ்வர் கோஷ் ஆகியோர் யுத் சேவா பதக்கம் பெறுகின்றனர்.

ஜோசப் சுராஸ், பிரஜூவல் சிங் மற்றும் அசோக் ராஜ் தாகூர் உள்ளிட்ட 13 பேருக்கும் யுத் சேவா பதக்கம் பெற உள்ளனர். இந்திய வான் பரப்பை பாதுகாத்ததிலும், தாக்குதல் நடத்தியதிலும் இவர்களின் பங்கு அதிகம்.

கடற்படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஏஎன் பிரமோத்- யுத் சேவா பதக்கம் பெறுகிறார்.

வீர் சக்ரா



கோஷங் லம்பா

லெப்டின்ட் கர்னர் சுஷில் பிஸ்ஜித்

சுபேதார் சதிஷ் குமார்

ரைபிள்மேன் சுனில் குமார்

ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை்காக) வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானப்படையை சேர்ந்த குரூப் கேப்டன் ரன்ஜீத் சிங் சித்து

குரூப் கேப்டன் மணீஷ் அரோரா

குரூப் கேப்டன் அனிமேஷ் பட்னி

குரூப் கேப்டன் குணால் கல்ரா

விங் கமாண்டர் ஜாய் சந்திரா

ஸ்குவாட்ரன் லீடர் சர்தக் குமார்

ஸ்குவாட்ரன் லீடர் சித்தாந்த் சிங்

ஸ்குவாட்ரன் லீடர் ரிஸ்வான் மாலிக்

பிளைட் லெப்., ஆர்ஷ்வீர் சிங் தாக்கூர் ஆகியோருக்கும் வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சவுரிய சக்ரா



லெப்டின்ட் கர்னர் நீதேஷ் சுக்லா

மேஜர் பார்கவ் கலிதா

மேஜர் ஆஷிஷ் குமார்

மேஜர் ஆதித்யா பிரதாப்

சுபேதார் ஷம்ஷெர் சிங்

லான்ஸ் நாயக் ராகுல் சிங்

முக்கிய அம்சங்கள்

ஆப்பரேஷன் சிந்தூரில் பங்காற்றிய அக்னி வீரர்கள் 3 பேருக்கு வீர தீர செயலுக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 2 பேருக்கு சேனா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான கீர்த்தி சக்ரா விருதும் 4 பேருக்கு வீர் சக்ரா விருதும், 8 பேருக்கு சவுர்ய சக்ரா விருது வழங்கப்படுகிறது.. இருவருக்கு சர்வோத்தம் யுதா சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.


வீர தீர செயலுக்கான வாயு சேனா பதக்கமும் விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஏர்மென் உள்ளிட்ட 26 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள், ஆப்பரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்திய அதிகாரிகளும், இதில், பாகிஸ்தான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் வகையில் எஸ் 400 வான் பாதுகாப்பு கவசத்தை இயக்கிய படையினரும் அடங்குவர்.

Advertisement