டில்லியில் கொட்டியது கனமழை; சுவர் இடிந்து 2 சிறுவர்கள் பலி; மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

3

புதுடில்லி: தென்மேற்கு டில்லியின் வசந்த் விஹாரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.


டில்லியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. டில்லி-என்சிஆர், லஜ்பத் நகர், ஆர்கே புரம், லோதி சாலை, டில்லி-ஹரியானா எல்லை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.


கல்கஜி பகுதியில் மரம் முறிந்து விழுந்த விபத்தில் சாலையில் நடந்து சென்றவர் பலியானர்.
இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர். ஒரு கார் பலத்த சேதம் அடைந்தது. வெள்ளம் சூழ்ந்த சாலைகளின் நடுவில் பல வாகனங்கள் பழுதடைந்தன. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.


தென்மேற்கு டில்லியின் வசந்த் விஹாரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். டில்லியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement