ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: வரும் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை:
நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு மாற்றம் செய்யப்பட்டு, நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
நிர்வாக காரணங்களால், தேதி மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கையில் கூறியுள்ளது.
கல்லறை திருநாள் காரணமாக, ஆசிரியர் தகுதி தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement