சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள்... பிரதமர் மோடி உடன் பங்கேற்பு

புதுடில்லி: சுதந்திர தின கொண்டாட்டத்தில், 'கோ கோ' உலக கோப்பை வென்ற இந்திய நட்சத்திரங்கள் முதல் முறையாக பங்கேற்க உள்ளனர்.
டில்லியில்,'கோ கோ' உலக கோப்பை முதல் சீசன் சமீபத்தில் நடந்தது. இதில் அசத்திய இந்திய ஆண்கள், பெண்கள் அணியினர் நுாறு சதவீத வெற்றியுடன் உலக கோப்பை வென்று வரலாறு படைத்தனர்.
இவர்களை கவுரவிக்கும்விதமாக, இன்று டில்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.
உலகில் பிரபலம் இந்தியாவில் பிறந்த 'கோ கோ' விளையாட்டு, பள்ளி முதல் கல்லுாரி வரை ஆர்வமாக விளையாடப்படுகிறது. பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளிலும் பிரபலம். ஆசிய விளையாட்டு (2026), ஒலிம்பிக்கில் (2036) 'கோ கோ' சேர்க்கப்பட வேண்டுமென மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
வாழ்வின் பெருமை இந்திய ஆண்கள் அணி கேப்டன் பிரதிக் வைகர் கூறுகையில், ''டில்லி செங்கோட்டையில் இன்று நடக்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். இதை வாழ்வின் பெருமைமிக்க தருணமாக கருதுகிறேன். எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது,''என்றார்.
இந்திய பெண்கள் அணியின் நிர்மலா கூறுகையில்,''குடியரசு, சுதந்திர தின கொண்டாட்டங்களை 'டிவி'யில் தான் பார்த்துள்ளேன். முதல் முறையாக சக வீராங்கனைகளுடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளேன். சிறப்பான உணர்வை தருகிறது,''என்றார்.
மோடிக்கு நன்றி இந்திய 'கோ கோ' கூட்டமைப்பின் நிர்வாக தலைவர் தியாகி கூறுகையில், ''செங்கோட்டையில் தேசிய கீதம் இசைக்கும் போது நமது நட்சத்திரங்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவர். இது, 'கோ கோ' விளையாட்டின் பெருமைமிக்க தருணமாக இருக்கும். எங்களுக்கு அங்கீகாரம் அளித்ததற்காக பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு நன்றி,''என்றார்.
மேலும்
-
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார்; புடின் உடன் சந்திப்புக்கு முன் டிரம்ப் பேட்டி
-
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு
-
டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
-
பஞ்சாப்பில் பயங்கரவாத சதிச் செயல் முறியடிப்பு; பாக்., பயங்கரவாதிகள் இருவர் கைது
-
நாய்க்கடியும் இருக்கக்கூடாது; நாயை கொல்லவும் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
-
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை