தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது

திருச்சி: மண்ணச்சநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ., கட்சியினரை, போலீசார் கைது செய்தனர்.

கிட்னி முறைகேடு தொடர்பாக புகார் எழுந்த தால், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி வேந்தரின் மகனும், மண்ணச்சநல்லுார் எம்.எல்.ஏ.,வுமான கதிரவன் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, திருச்சி பா.ஜ.,வினர் அறிவித்தனர்.

அதனால், நேற்று மாலை, மண்ணச்சநல்லுாரில் உள்ள எம்.எல்.ஏ., கதிரவன் அலுவலகம் முன், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருச்சி வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தனர். போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

Advertisement