எல்லா திட்டங்களையும் ஒரே நாளில் முடிக்க முடியாது

10

ஆட்சிக்கு வந்தவுடன் ஒட்டுமொத்தமாக அனைத்து திட்டங்களையும் ஒரே நாளில் செயல்படுத்த முடியாது. அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கால அளவை விமர்சிக்காமல், அறிவிக்கப்படுகிற திட்டங்களால் மக்களுக்கு ஏற்படுகிற நன்மைகளை புரிந்து கொண்டு, பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்த வேண்டும். இல்லாவிட்டால், வசை பாடாமல், திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

முதலில், அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள், அடுத்து மக்களுக்கு தேவையானதை ஒன்றன் பின் ஒன்றாக, நிதிநிலைக்கேற்ப தொடர்ந்து செயல் படுத்தி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் கூறியது மட்டுமின்றி, அறிவிப்பில் இல்லாத, மக்களின் தேவைகளுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம்.

- சேகர்பாபு அறநிலைய துறை அமைச்சர், தி.மு.க.,

Advertisement