சிறையில் கொள்ளையன் தூக்கிட்டு தற்கொலை

புதுடில்லி:சிறையில் கொள்ளையன் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொள்ளை, கொலை முயற்சி உட்பட பல குற்றவழக்குகளில் தொடர்புள்ளசல்மான் தியாகி, கைது செய்யப்பட்டு, மண்டோலி சிறை வளாகத்தில், 15ம் எண் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வார்டன்கள் ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்த போது, சல்மான் தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். சல்மான், தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சல்மான் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement