ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் மேக வெடிப்பு; 7 பேர் பலி; 6 பேர் காயம்

1


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று (ஆகஸ்ட் 17) ஏற்பட்ட மேக வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.


ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், கடந்த 14ல் திடீர் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சிசோட்டியை ஒட்டிய மலைப்பாதையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடைகள், வீடுகள், ஹோட்டல்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தோர் எண்ணிக்கை 100 ஆனது. சிசோட்டி கிராமத்தில் 82 பேர் மாய மாகியுள்ளனர். இதில் ஒருவர் சி.ஐ.எஸ்.எப்., வீரர் மனோஜ்குமார் மற்றும் 81 பேர் பக்தர்கள். இது தவிர ஜம்மு, உதம்பூர், சம்பா மாவட்டங்களில் பலர் மாயமாகியுள்ளனர்.



இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மாயமானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement