கிரெடிட் கார்டு விபரங்களை திருடி ரூ.2.6 கோடி மோசடி: 18 பேர் கைது
புதுடில்லி,:நாடு முழுதும், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' கிரெடிட் கார்டு வைத்திருப்போரிடம் இருந்து, 2.6 கோடி ரூபாய் மோசடி செய்த, 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் புலானாய்வுப் பிரிவு துணைக் கமிஷனர் வினித் குமார் கூறியதாவது:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்டு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் ரகசியத் தரவை, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு கால் சென்டரின் ஊழியர்கள், மோசடிக் கும்பலுக்கு பகிர்ந்துள்ளனர். அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி, 'ஆன் - லைன்' பயண முன்பதிவு இணையதளம் வாயிலாக மின்னணு பரிசு அட்டைகளை மோசடிக் கும்பல் வாங்கியுள்ளது. அந்த பயண அட்டைகளை டிராவல் ஏஜென் டுகளுக்கு விற்று அதை பணமாக்கியுள்ளனர்.
இந்தக் கும்பல், ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்களிடன் கிரெடிட் கார்டு தரவுகளைப் பயன்படுத்தி, 2.6 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த மோசடியால், நாடு முழுதும் ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அங்கித் ரதி, வசீம் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோரையும் குருகிராம் கால் சென்டர் ஊழியர்கள் விஷேஷ் லஹோரி மற்றும் துர்கேஷ் தகத் ஆகியோரையும் கைது செய்தனர். ஐந்து பேரிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில் இந்த மோசடிக்கு உதவிய மொபைல் போன் சிம் கார்டு சப்ளையர்கள் உட்பட மேலும் 13 பேரும் கைது செய்யப்பட்டனர். மோசடிக் கும்பலிடம் இருந்து, 52 மொபைல் போன்கள், ஏராளமான சிம் கார்டுகள் மற்றும் வாடிக்கையாளர் வங்கி விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள, 18 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பட்டியலின மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்; திருமா மீது எல்.முருகன் பாய்ச்சல்
-
மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்; மதுரையில் அதிர்ச்சி
-
4 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடு ரூ.10 லட்சம் கோடி: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் மேக வெடிப்பு; 4 பேர் பலி; 6 பேர் காயம்
-
மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் பலி
-
'வாக்காளர் உரிமை யாத்திரை' பீஹாரில் இன்று ராகுல் துவக்கம்