காரை கொண்டு மோதி மருமகனை கொலை செய்த மாமனார்
மேலூர்: பூதமங்கலம் சதீஷ்குமார் 21, தும்பை பட்டி ராகவி 24, (இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார்).
இந்நிலையில் சதீஷ்குமார் ராகவியை திருமணம் செய்தார் .இத் திருமணத்திற்கு ராகவி யின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . தவிர மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் ராகவியின் தந்தை நகையை எடுத்துச் சென்றதாக புகார் கொடுக்கவே இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்தனர். நேற்று நள்ளிரவு 11:30 மணி வரை விசாரணை தொடரவே இரு தரப்பினரையும் போலீசார் இன்று விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்தனர்.
சதீஷ்குமார் டூவீலரில் ராகவியை அழைத்துச் சென்றார் . அய்யா பட்டி விளக்கருகே சென்றபோது ராகவியின் உறவினர்கள் பின்னால் காரில் சென்று டூ வீலர் மீது மோதி தாக்கியதில் சதீஷ்குமார் இறந்தார் . ராகவி மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
குருகிராமில் யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச்சூடு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
-
பொய் குற்றச்சாட்டுகளை கண்டு பயப்பட மாட்டோம்: தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி
-
ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.1.13 கோடி அபராதம்: மும்பை போலீஸ் 'சுறுசுறு'
-
நல்ல கூட்டணி அமையும்; தொண்டர்கள் தான் எல்லாமே என பொதுக்குழுவில் ராமதாஸ் உருக்கம்
-
குவைத்தில் சட்டவிரோத மது விற்பனை; இந்தியர் உட்பட 67 பேர் கைது
-
டில்லியில் சிறப்பான சாலை போக்குவரத்து; 2 புதிய நெடுஞ்சாலைகளை திறந்து வைத்த மோடி பெருமிதம்