ஆரணி ஆற்று பாலத்தில் செடிகள் பலவீனம் அடையும் அபாயம்

பொன்னேரி:மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் ஆரணி ஆற்று பாலத்தில், செடிகள் வளர்ந்து பராமரிப்பு இன்றி இருப்பதால், பலவீனம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொன்னேரி - பழவேற்காடு சாலையில், போலீசாச்சியம்மன்குளம் கிராமம் அருகில், ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், தடுப்புகளும் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன.

பாலம் பராமரிப்பு இன்றி இருப்பதால், பலவீனம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதான போக்குவரத்து வழித்தடமாக, இந்த பாலம் உள்ளது.

தற்போது பாலம் பலவீனம் அடைந்து வருவதால், மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனவே, மழைக்காலம் துவங்கும் முன், பாலத்தை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement