தெரு நாய்களுக்கு ஆதரவு சென்னையில் ஊர்வலம்

1

சென்னை: தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் சென்னையில் நேற்று ஊர்வலம் நடத்தினர்.



ரேபீஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும் தெருநாய் கடி குறித்து தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, நிரந்தரமாக நாய் காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தது.

தெரு நாய்களுக்கு எதிராக இந்த உத்தரவு இருப்பதாகக் கூறி விலங்கு ஆர்வலர்கள் டில்லி உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் விலங்குகளுக்கான உரிமைகளுக்கு போராடும் செயல்பாட்டாளர்களால் ஊர்வலம் நடத்தப்பட்டது.

தெரு நாய்களுக்கு ஊசி போட்டு, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். தெருநாய்களை வெளியேற்றக் கூடாது. மனிதாபிமானமற்ற தீர்ப்பை, நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். திருச்சியில் விலங்குகள் நல ஆர்வலர்கள், 100க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement