தி.மு.க.,வில் முக்கியமானவர்கள் பா.ஜ.,வுக்கு விரைவில் வர உள்ளனர்: மத்திய அமைச்சர் முருகன் தகவல்
சென்னை: ''பட்டியலின மக்களுக்கு, மிகப் பெரிய துரோகத்தை திருமாவளவன் இழைத்து கொண்டிருக்கிறார்,'' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: கடந்த 2009 - 2014 வரை மத்தியில் இருந்த தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 879 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, இந்த ஆண்டு மட்டும் 6,666 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையத்திற்கு இணையாக, 800 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது.
ஒன்பது இரட்டை வழித்தடங்கள் உட்பட 2,587 கி.மீ., துாரத்திற்கு, 33,467 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் பாதை அமைக்கும் பணி நடக்கிறது. தமிழக வரலாற்றில், ரயில்வேயில் இந்த அளவு பணிகள் நடப்பது இதுவே முதல் முறை. தமிழகத்தில் 38 ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், 13 மாவட்டங்கள் பயன் பெறும்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்த பின், கடந்த 11 ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளன.
பட்டியலின மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை திருமாவளவன் இழைக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பட்டியலின மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு,அவர் ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை. பட்டியலின மக்கள் எப்படி போனால் தனக்கென்ன? எம்.எல்.ஏ., - எம்.பி., ஆக வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.
எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு சேரும் கூட்டத்தைப் பார்த்து, ஸ்டாலின் பயத்தில் விமர்சித்துவருகிறார். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும். நான் தமிழக பா.ஜ., தலைவராக இருந்த போது, முக்கியமான பலர் தி.மு.க.,வில் இருந்து பா.ஜ.,வில் இணைந்தனர். தற்போதும் பலர் வர தயாராக உள்ளனர்; அதற்கான பேச்சு நடக்கிறது.இவ்வாறு கூறினார்.
மேலும்
-
குஜராத் பள்ளியில் கொடூரம்: 8ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை
-
கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கும் திருமாவளவன்: நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
-
தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!
-
போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை முறையில் ஊழியர்கள் நியமனம்: அன்புமணி கண்டனம்
-
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்: அறிவித்தார் வைகோ
-
'பெர்ட்ரம்' டென்னிஸ் போட்டி கோவை பி.எஸ்.ஜி., அணி வெற்றி