இளையான்குடியில் துார்ந்த நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு கட்டாந்தரையானது
மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடியில் துார்ந்து போன நீர் நிலைகள் மற்றும் மடைகள்,கால்வாய்களால் தண்ணீரின்றி நிலங்கள் வறண்டு காணப்படுகிறது.
மானாமதுரை வைகை ஆற்றங்கரையோரம் விவசாயிகள் வைகை தண்ணீரைக் கொண்டு நெல், கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர்.
வானம் பார்த்த இளையான்குடியில் பெய்யும் மழையை வைத்து குண்டு மிளகாய் மற்றும் நெல், பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர். சில வருடங் களாக பருவமழை காலத்தில் பெய்யும் மழையளவு குறைந்து வருவதால் விவசாயம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
இப்பகுதி கண்மாய்கள், குளங்கள், கிணறுகள் போன்றவற்றிற்கு நீர் ஆதாரத்தை வழங்கும் கால்வாய்கள், மடைகள் முறையாக மராமத்து செய்யாத காரணத்தினால் துார்ந்து போதிய நீர் இல்லாமல் ஏராளமான வயல்கள் கட்டாந்தரையாக மாறி விட்டது. விவசாய கூலி வேலை செய்பவர்களும் வேலை கிடைக்காமல் சொந்த ஊர்களை காலி செய்து விட்டு வெளியூர் களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் சிலர் கூறியதாவது: சில வருடங் களாக மழை குறைந்ததோடு, நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் உள்ள மடைகள் முறையாக மராமத்து செய்யாத காரணத்தினால் துார்ந்து போய்விட்டது.
விவசாய நேரத்தில் பயிர்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் பலர் தங்களது விளை நிலங்களை அப் படியே விட்டு விட்டனர். இதனால் கருவேல மரங்கள் வளர்ந்து கட்டாந் தரையாக காட்சியளித்து வருகிறது.
ஆகவே விவசாயி களின் நலன் கருதி தமிழக அரசு நீர்நிலைகள் மற்றும் கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களை தூர்வாரி மராமத்து செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
-
வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்
-
எஸ்.இ.ஆர்.சி. ஆய்வகங்களில் மத்திய மின் துறை செயலர் ஆய்வு
-
ககன்யான் திட்டத்திற்கு உங்கள் அனுபவம் மதிப்புமிக்கது; சுக்லா உடன் பேசிய வீடியோ வெளியிட்டார் மோடி
-
திருமாவுடன் தே.மு.தி.க., சுதீஷ் சந்திப்பு தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரமா?
-
முடங்கியது ஏர்டெல்: பயனர்கள் தவிப்பு