வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்

மதுரை: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* ஆக., 27, செப்., 3, 10ல் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06061), மறுநாள் மதியம் 3:15 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். மறுமார்க்கத்தில் ஆக., 28, செப்., 4, 11ல் மாலை 6:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06062), மறுநாள் காலை 11:55 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

இவ்விரு ரயில்களும் கோட்டயம், காயங்குளம், கொல்லம், புனலுார், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும்.

ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் இயக்கப்படும்.

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி ஆக., 27, செப்., 3ல் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மதியம் 3:25 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில் (06115), மறுநாள் அதிகாலை 3:55 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். மறுமார்க்கத்தில் ஆக., 28, செப்., 4ல் இரவு 7:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06116), மறுநாள் காலை 6:55 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும்.

இவ்விரு ரயில்களும் நெய்யாற்றின்கரா, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும். 2 ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 3ஏ.சி., மூன்றடுக்கு 'எகானமி' படுக்கை வசதிப் பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு பேன்ட்ரிகார், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் இயக்கப்படும்.

இவற்றுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

Advertisement