முடங்கியது ஏர்டெல்: பயனர்கள் தவிப்பு

புதுடில்லி: பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் அவதிக்கு ஆளாகினர்.

நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்று, ஏர்டெல். நாடு முழுதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் சேவையை ப யன்படுத்துகின்றனர். அது மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் இணையதள சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 'ஏர்டெல் மொபைல் போன்' மற்றும் இணையதள சேவை நேற்று திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைந்தனர்.

நாடு முழுதும் பரவலாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், டில்லி மற்றும் என்.சி.ஆர்., எனப்படும் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் உணரப்பட்டது.

நேற்று மாலை 4:30 மணி நிலவரப்படி, 3,500க்கும் மேற்பட்டோர், 'டவுன் டிடெக்டர்' தளத்தில் 'ஏர்டெல்' சேவை முடங்கியதாக புகார் தெரிவித்திருந்தனர்.

ஏர்டெல் நிறுவனமும் தன் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்கள் நிறுவனத்தின் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்து. சேவைகளை உடனடியாக மீட்டெடுக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்' என, தெரிவித்தது.

ஜியோ மற்றும் வி.ஐ., நிறுவனத்தின் சேவைகளும், சில மணி நேரம் பாதிக்கப்பட்டதாக வாடிக்கையா ளர்கள் குற்றஞ்சாட்டினர். அடுத்த சில மணி நேரத்தில், அனைத்து நிறுவனங்களின் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு, இயல்பான சேவை வழங் கப்பட்டது.

Advertisement