மாநில சிலம்பம் போட்டி

1

சிவகங்கை, : தேவகோட்டையில் மாநில சிலம்பம் போட்டி நடந்தது. இதில் 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், தொடு போட்டி உள்ளிட்ட பிரிவுகளில் நடந்தது. அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவன் க.ஹரிராஜ் தொடுதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.

அவரை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயா, ஜான்சார்லஸ், ஆலிஸ்மேரி, பள்ளி செயலாளர் நடேசன், தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement