துணை ஜனாதிபதி தேர்தல்: இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்

14


புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில், இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, கார்கே முன்னிலையில் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார்.


15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க செப்., 9ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், (ஆகஸ்ட் 21) முடிவடைகிறது.

இந்நிலையில், இன்று இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, கார்கே முன்னிலையில், ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சிகள் சார்பில் சரத் பவார், திருச்சி சிவா, ராம் கோபால் யாதவ், சஞ்சய் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



தே.ஜ.,கூட்டணி சார்பில், சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement