பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்

புதுடில்லி: பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. லோக்சபாவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். இந்த அமர்வில் 14 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 37 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது.
ஆனால் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே, பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் அலுவல் நேரங்கள் செயல்படாமல் முடங்கின.
ஒத்திவைப்பு
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான விவாதங்கள் மட்டுமே லோக்சபாவில் நடந்தன. மற்ற எந்த விவாதங்களும் நடக்க விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் முட்டுக்கட்டை போட்டனர். இந்த சூழலில் இன்று லோக்சபாவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.
14 மசோதாக்கள்
இந்த அமர்வில், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோரை 30 நாட்கள் கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்து பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட 14 அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களில் ஒன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை மசோதா ஆகும்.
37 மணி நேரம்
இது குறித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: இந்த அமர்வில் 120 மணி நேரம் விவாதங்களை நடத்துவோம் என்று முடிவு செய்திருந்தோம். அலுவல் ஆலோசனைக் குழுவும் இதற்கு ஒப்புக்கொண்டது.
ஆனால் தொடர்ச்சியான எதிர்க்கட்சிகள் அமளி மற்றும் திட்டமிடப்பட்ட இடையூறுகள் காரணமாக, இந்த அமர்வில் 37 மணிநேரம் கூட எங்களால் வேலை செய்ய முடியவில்லை. விவாதம் நடத்த விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையூறு செய்தனர். இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்தார்.
@block_G@
ராஜ்யசபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில், உடல் நலத்தை காரணம் காட்டி முன்னாள் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபாவை தலைவருமான ஜக்தீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. block_G


மேலும்
-
த.வெ.க மாநாடு: தி.மு.க - பா.ஜ மீது கடும் விமர்சனம்; அதிமுக மீது கரிசனம்!
-
கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: மாநாட்டில் விஜய் திட்டவட்டம்!
-
இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும்; அறிவித்தார் நாராயணன்
-
த.வெ.க மாநாடு நிறைவு; 35 நிமிடம் பேசினார் விஜய்!
-
மணல் கடத்தல் மாபியாக்களுக்கு ஒத்துழைக்கும் அரசு: சந்தேகம் எழுப்புகிறார் நயினார்
-
'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை: ராஜ்யசபாவில் நிறைவேறியது மசோதா