இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும்; அறிவித்தார் நாராயணன்

4


புதுடில்லி: இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.


இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், முன்னேற்றம் அபரிமிதமானது. 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை செய்த பணிகளை விட 2015 முதல் 2025ல் இஸ்ரோ கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பணிகளை முடித்து உள்ளது.கடந்த ஆறு மாதங்களில், மூன்று முக்கியமான பயணங்கள் முடிக்கப்பட்டன.

2,3 மாதங்களில்...!





ஆக்ஸியம் 4 பணி மிகவும் மதிப்புமிக்க பணியாகும், இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு பூமி திரும்பிய முதல் இந்தியர் கேப்டன் சுபான்ஷு சுக்லா எங்களிடம் உள்ளார். அடுத்த 2-3 மாதங்களில், மற்றொரு நாசா-இஸ்ரோ பணி தொடங்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, எங்களிடம் ஒரே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் மட்டுமே இருந்தது. இன்று, விண்வெளித் துறையில் 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களால் இரண்டு துணை சுற்றுப்பாதை பணிகள் செய்யப்படுகின்றன.

டிசம்பரில் தொடங்கும்





அமெரிக்காவின் 6,500 கிலோ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளன. இன்று வரை, 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளன. இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும். இவ்வாறு நாராயணன் கூறினார்.

Advertisement