2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு; ஒரு சவரன் ரூ.73,720!

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.73,720க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,180 ரூபாய்க்கும், சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட் 21) தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 9,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 73,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.73,720க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,215க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவை கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து (1)
Nada raja - TIRUNELVELI,இந்தியா
22 ஆக்,2025 - 11:42 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பெண்களை ஏளனமாக பேசும் திமுக அமைச்சர்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
பிரதமரை பற்றி பேசும் அளவுக்கு விஜய் வளரவில்லை: சரத்குமார் காட்டம்
-
ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்கள்; பீஹாரில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
-
இந்தியா தான் உலகிலேயே அழகு: வீடியோ வெளியிட்டு வர்ணித்த விண்வெளி வீரர் சுக்லா
-
திருச்செந்துார் கோவிலில் சுவாமி பச்சை சாத்தி வீதியுலா
-
பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது
Advertisement
Advertisement