பிரதமரை பற்றி பேசும் அளவுக்கு விஜய் வளரவில்லை: சரத்குமார் காட்டம்

21


தூத்துக்குடி: ''மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை'' என நிருபர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

திருநெல்​வேலி​யில் இன்று (ஆகஸ்ட் 22) நடை​பெறும் பாஜ பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜவை சேர்ந்தவரும், நடிகருமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.



அங்கு நிருபர்கள் சந்திப்பில் சரத்குமார் கூறியதாவது: மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை. பாசிசம் என்றால் அவருக்கு என்ன என்று தெரியுமா என்று தெரியவில்லை. 24ம் தேதி விலாவாரியாக கள்ளக்குறிச்சியில் நான் பேசுகிறேன்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும். என்ன பேசுகிறோம், எதை பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று பேச்சில் கவனத்துடன் பேச வேண்டும். நடிகர் விஜய் கொள்கை ரீதியாக பேச வேண்டும். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

Advertisement