திருச்செந்துார் கோவிலில் சுவாமி பச்சை சாத்தி வீதியுலா

துாத்துக்குடி: ஆவணி திருவிழாவை முன்னிட்டு திருச்செந் துார் கோவிலில் நேற்று சுவாமி சண்முகருக்கு பச்சை சாத்தி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற் றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 8ம் நாள் திரு விழாவான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி சண் முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள் ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதனையடுத்து அலங்கார தீபாரனை நடை பெற்றது. தொடர்ந்து பச்சைக் கடைசல் சப்பரத் தில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம் பாளுடன் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பச்சை வண்ண மரிக்கொழுந்து மலர்களை தூவி அரோகரா பக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் சுவா மியை தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது.

Advertisement