பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

3


புதுடில்லி: டில்லியில் பார்லிமென்டிற்குள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்லிமென்ட் மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. இந்த நிலையில், பார்லிமென்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.

இன்று காலை 6.30 மணியளவில் ரயில் பவன் அருகே உள்ள சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து, கருடா நுழைவு வாயில் அருகே சென்றுள்ளார். இதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதே போன்று கடந்த ஆண்டு பார்லிமென்ட் வளாகத்திற்குள் அத்துமீறி ஒரு நபர் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement