சவூதி அரேபியாவில் இறந்த தமிழரின் உடல் மதுரை வந்தது

சவூதி அரேபியாவில் இறந்த மதுரையைச் சேர்ந்த தமிழரின் உடலை சவூதி அரேபியா NRTIA அயலக தி.மு.க மேற்கு மண்டல அமைப்பினர் தாயகம் அனுப்பி வைத்தனர்.
மதுரை மேலூர் தாலுகா பட்டூர் கீழத்தெருவைச் சேர்ந்த பாண்டி பழனிச்சாமி (வயது 70) அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் கிலோ 14 இல் உள்ள ஒரு தனியார் கிரானைட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்த அவரது உடலை தாயகத்திற்கு கொண்டு வர ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அயலக திமுக விற்கு கோரிக்கை வர, அதை சவூதி அரேபியா மேற்கு மண்டல அமைப்பாளர் S எழில் மாறன் மற்ற துணை அமைப்பாளர் தஞ்சை ஜாஹிர் இருவரும் அந்த பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.
இறந்தவர்களின் குடும்பத்தினர் அயலக தி.மு.கவின் துணை அமைப்பாளர் ஜாஹிர் அவர்களுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்து இறந்தவரின் உடலை தாயகம் கொண்டு வந்து சேர்க்க முயற்சிகளை மேற்கொள்ள பட்டது.
S எழில் மாறன், ஜாஹிர் மற்றும் மேற்கு மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மண்டலத் தலைவர் முனாஃப் அவர்களின் ஒத்துழைப்புடன் காவல்துறை, மருத்துவமனை, மார்ச்சுவரி, கார்கோ அலுவலகம் மற்றும் அமீர் அவர்களின் ஒப்புகை சீட்டு வரை முறையாக பெற்று, 20.08.2025 இரவு சென்னைக்கு ஜெத்தாவில் இருந்து இறந்தவரின் உடலை அனுப்பி வைத்தனர்.
அயலக அணியின் அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர் ரியாத் டாக்டர் சந்தோஷ் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை அருகே இருக்கும் இறந்தவரின் கிராமத்திற்கு உடலை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் இலவச ஆம்புலன்ஸ்க்கு வழி வகுத்தார்.
இறந்தவரின் மகன் வடிவேலு 21.08.2025 அன்று சென்னையில் பாண்டி பழனிச்சாமியின் உடலை பெற்றுக்கொண்டார். இந்த சேவைக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனை வழங்கிய சட்ட ஆலோசகர் ரியாத் டாக்டர் சந்தோஷ், அபஹா முனைவர் நூஹ் மற்றும் ஜெத்தா தமிழ்ச் சங்கம் சிராஜ் தொடர்ந்து ஆலோசனை வழங்கி விரைந்து பணி முடிக்க உதவினர். இந்த பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் தனக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட பொறுப்புக்களை முறையாக செய்தனர்.
மேலும்
-
பெண்களை ஏளனமாக பேசும் திமுக அமைச்சர்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
பிரதமரை பற்றி பேசும் அளவுக்கு விஜய் வளரவில்லை: சரத்குமார் காட்டம்
-
ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்கள்; பீஹாரில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
-
இந்தியா தான் உலகிலேயே அழகு: வீடியோ வெளியிட்டு வர்ணித்த விண்வெளி வீரர் சுக்லா
-
திருச்செந்துார் கோவிலில் சுவாமி பச்சை சாத்தி வீதியுலா
-
பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது