தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மரணம்; பிரதமர் இரங்கல்

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியரான தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டீஷ் தொழில் அதிபர் ஸ்வராஜ் பால். இவருக்கு வயது 94. பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த இவர், பிரிட்டீஷ் அரசியலிலும் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்தார்.
இந்தியா- பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேம்பட தொடர்ந்து பாடுபட்டவர்.
சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மறைவு செ ய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.
இங்கிலாந்தில் தொழில்துறையில் இவரது பங்களிப்பு மற்றும் இந்தியா உடனான நெருக்கமான உறவுக்கு அவர் அளித்த ஆதரவு நினைவுக் கூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும்
-
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித்ஷா உறுதி
-
பீஹாரில் லாலு கட்சியில் அதிருப்தி; பிரதமர் விழாவில் பங்கேற்ற ஆர்ஜேடி எம்எல்ஏக்கள்
-
வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்; ராஜ்நாத் சிங் பெருமிதம்
-
பழைய பெட்டி கேமரா கலைஞன், டிகாம் சந்த்
-
நான் ஒரு பிறவி காங்கிரஸ்காரன்; பாஜவில் இணைவதாக வெளியான தகவலுக்கு டி.கே. சிவகுமார் மறுப்பு
-
தங்கம் வென்றார் இளவேனில்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்