நான் ஒரு பிறவி காங்கிரஸ்காரன்; பாஜவில் இணைவதாக வெளியான தகவலுக்கு டி.கே. சிவகுமார் மறுப்பு

பெங்களூரு; நான் ஒரு பிறவி காங்கிரஸ்காரன் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையில் நேற்றைய விவாதத்தின் போது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீதத்தை பாடினார். மொத்தம் 73 வினாடிகள் கொண்ட அவரின் பாட்டு பாடும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையானது. அவர் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜவில் இணைய இருக்கிறார் என்று தகவல்கள் கசிந்தன. இதையடுத்து, டி.கே. சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
நான் பிறவியிலே ஒரு காங்கிரஸ்காரன். வாழும்வரை காங்கிரஸ்காரனாக தான் வாழ்வேன். கட்சியை முன்னின்று நடத்தி வருகிறேன். கட்சிக்கு ஒரு தூணாக என்றும் இருப்பேன்.
நேரடியாகவோ,மறைமுகமாகவோ பாஜ, ஆர்எஸ்எஸ்சுடன் கைகோர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஜனதா தளம் மற்றும் பாஜ பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஆர்எஸ்எஸ் பற்றியும் கற்றுக் கொண்டேன்.
ஒவ்வொரு கட்சியை பற்றியும் நான் ஆராய்ச்சி செய்துள்ளேன். மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தனது அமைப்பை எப்படி கட்டமைத்தது என்று எனக்கு தெரியும். ஒவ்வொரு தாலுகா, மாவட்டம் என எல்லா இடங்களிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இவ்வாறு டி.கே. சிவகுமார் கூறினார்.
மேலும்
-
பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல் அமைச்சர்
-
இந்தியா மீது வரி விதிப்பை கண்டித்த டிரம்ப் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., ரெய்டு
-
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு இல்லை; ரஷ்யா திட்டவட்டம்
-
ஆக.30ல் இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; அதிமுக அறிவிப்பு
-
விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையம்; மாதிரியை வெளியிட்டது இஸ்ரோ!
-
போதைக்கு எதிரான போரில் தமிழகம் முதலிடம் என ஸ்டாலின் நகைச்சுவை; அன்புமணி கிண்டல்