பிரமாண்ட விநாயகர் சிலைகள்; வெளி மாநில விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் பிர மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
விழுப்புரம் அருகே கைவினைஞர் கிராமமான அய்யங்கோவில்பட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரமாண்ட காகித கூழ் விநாயகர் சிலைகளை தயாரித்து, வெளி மாநிலங்களுக்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள, 25 மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், குழுவினராக இருந்து, ஆண்டு முழுவதும் விநாயகர் சிலை தயாரிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் 5,000 சிலைகள் வரை விற்பது வழக்கம்.
கடந்த ஜனவரியில் இருந்து சிலை தயாரிப்பதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர். தற்போது, சிலையின் பாகங்களை ஒட்டி அதற்கு வண்ணம் பூசி விற்பனைக்கு தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் கூறிய தாவது:
இந்தாண்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணி, தொடர் மழை காரணமாக தாமதமாகி உள்ளது. களிமண்ணில் அச்சு வார்த்து, பிறகு கிழங்கு மாவு, காகித கூழ் கலவை மூலம் பிரமாண்ட விநாயகர் சிலை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு, 2 அடி முதல், 12 அடி உயரம் வரையில் காகித கூழ் விநாயகர் சிலைகள் தயாரிக்கிறோம். கடந்த வாரத்திலிருந்து பாகங்களை இணைத்து இறுதி கட்ட பணிகள் நடக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிலைகளை தயாரித்து அனுப்பி வருகிறோம்.
தொடர்ந்து தயாரிக்கப்பட்டுள்ள வித விதமான சிலைகளுக்கு 'வாட்டர்' கலர் பெயிண்ட் அடித்து, உள்ளூர் விற்பனைக்கு அடுக்கி வைத்துள்ளோம். பாம்பே மாடல் விநாயகர், கற்பக விநாயகர், ராஜ கணபதி, தாமரை வாகன கணபதி, எலி, சிம்மம், மயில், பசு, புல்லட் ஆகிய வாகனங்களில் அமர்ந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் உயரத்திற்கேற்ப ஆயிரம் ரூபாய் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்கு வழங்குகிறோம்.
தற்போது பல மாவட்டங்களிலும் சிலை உற் பத்தி நடப்பதால், இந்தாண்டு விற்பனை, 50 சதவீதம் குறைந்து விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
துபாயில் இருந்து பண்டல், பண்டல்களாக கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்: கோவை ஏர்போர்ட்டில் 7 பேர் கைது
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு
-
தேர்தல் பிரசாரத்துக்கு மீண்டும் கோவை வருகிறார் இ.பி.எஸ்.,
-
போட்டி தேர்வுக்கு மாதிரி பள்ளி கோவையில் அமைக்க திட்டம்
-
'தினமலர்', கே.எம்.சி.எச்., சார்பில் வரும் 26ல் 'நலம் பேசலாம்' வாங்க!
-
காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்