பழங்குடியினர் வீடுகளுக்கு மாதிரி சோலார் மின் திட்டம்
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகம், நபார்டு சார்பில், நொச்சியோடை பழங்குடியினர் குடியிருப்புக்கான மாதிரி சோலார் கிராமத் திட்ட துவக்க விழா நடந்தது. நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராபின்சன்ராஜா வரவேற்றார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். பின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள திட்ட ஒப்புதல் கடிதத்தை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் ஆனந்த், பளியர் பழங்குடியினர் பிரதிநிதிகளிடமும் வழங்கினார்.
இத்திட்டம் ஆறு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நொச்சியோடை குடியிருப்பு மேகமலை உள்பகுதியில் 32 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 18 வீடுகளில் 76 பேர் வசிக்கின்றனர்.இதுவரை மின்சார வசதி எட்டாத நிலையில், புதிய சோலார் மின் திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. நிகழ்வில் புலிகள் காப்பக துணை இயக்குனர் விவேக்யாதவ் நன்றி தெரிவித்தார்.
மேலும்
-
துபாயில் இருந்து பண்டல், பண்டல்களாக கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்: கோவை ஏர்போர்ட்டில் 7 பேர் கைது
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு
-
தேர்தல் பிரசாரத்துக்கு மீண்டும் கோவை வருகிறார் இ.பி.எஸ்.,
-
போட்டி தேர்வுக்கு மாதிரி பள்ளி கோவையில் அமைக்க திட்டம்
-
'தினமலர்', கே.எம்.சி.எச்., சார்பில் வரும் 26ல் 'நலம் பேசலாம்' வாங்க!
-
காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்