டிக்டாக் செயலிக்கு அனுமதி இல்லை; மத்திய அரசு திட்டவட்டம்

புதுடில்லி: இந்தியா- இந்தியா - சீனா இடையே உறவு வலுப்பெற்று வர துவங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க போவதாக வந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
டிக் டாக்' எனப்படும், சீன நிறுவனத்தின் மொபைல்போன் செயலியில் பதிவாகும் தகவல்கள், சீன அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக புகார் எழுந்தது. 2020ம் ஆண்டில் இந்திய -சீன எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் நம் ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து இந்தியாவில் டிக் -டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்கிறார். இதன் மூலம் இந்தியா - சீனா இடையேயான உறவு வலுப்பெற தொடங்கி உள்ளதால் மீண்டும் டிக்டாக் செயலியை மத்திய அரசு அனுமதிக்கப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின.
இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. டிக் டாக் தடையை நீக்கும் எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற எந்தவொரு அறிக்கையும், செய்தியும் தவறானது என தெரிவித்துள்ளது.


மேலும்
-
துபாயில் இருந்து பண்டல், பண்டல்களாக கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்: கோவை ஏர்போர்ட்டில் 7 பேர் கைது
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு
-
தேர்தல் பிரசாரத்துக்கு மீண்டும் கோவை வருகிறார் இ.பி.எஸ்.,
-
போட்டி தேர்வுக்கு மாதிரி பள்ளி கோவையில் அமைக்க திட்டம்
-
'தினமலர்', கே.எம்.சி.எச்., சார்பில் வரும் 26ல் 'நலம் பேசலாம்' வாங்க!
-
காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்