முத்தாலம்மன் கோவில் திருத்தேர் வீதியுலா

புதுச்சேரி : வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவில் திருத்தேர் வீதியுலாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் சுவாமி தரிசனம் செய்தார்.
வைத்திக்குப்பம், முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில், 42ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று மதியம் அம்மனுக்கு சாகை வார்த்தல், மாலை செடல் உற்சவம் நடந்தது.
தொடர்ந்து, நடந்த திருத்தேர் அம்மன் வீதியுலாவில், அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இன்று (23ம் தேதி) காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு விநாயகர், முருகர், அம்மன் முத்து பல்லக்கு வீதியுலா நடக்கிறது. நாளை (24ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவி ல் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலும்
-
துபாயில் இருந்து பண்டல், பண்டல்களாக கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்: கோவை ஏர்போர்ட்டில் 7 பேர் கைது
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு
-
தேர்தல் பிரசாரத்துக்கு மீண்டும் கோவை வருகிறார் இ.பி.எஸ்.,
-
போட்டி தேர்வுக்கு மாதிரி பள்ளி கோவையில் அமைக்க திட்டம்
-
'தினமலர்', கே.எம்.சி.எச்., சார்பில் வரும் 26ல் 'நலம் பேசலாம்' வாங்க!
-
காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்