ஓவிய கண்காட்சி

புதுச்சேரி : செல்வா ஏஞ்சல் அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் ஓவியக்கண்காட்சி மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா செயின் தெரேஸ் வீதியில் உள்ள வண்ண அருவி ஓவியக்கூடத்தில் நடந்தது.

ஓவியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிற்பி சிவசங்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள், கலைமாமணி அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுச்சேரியில் இருந்து 9 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றன. கண்காட்சி வரும் 27 ம் தேதி வரை நடக்கிறது. வண்ண அருவி ஓவியக்கூடம் நிறுவனர் மணிமாறன் நன்றி கூறினார்.

Advertisement