தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம்: அமித் ஷா

29

திருநெல்வேலி: ''சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம் என, அமித் ஷா பேசினார்.



திருநெல்வேலியில் நேற்று நடந்த பா.ஜ., பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி எப்போதும் தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் நேசிப்பவர்.

மதத்தின் பெயரால் நடந்த பயங்கரவாத தாக்குதலை வேரோடு அழிப்பதற்காக, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட ஒவ் வொரு பயங்கரவாதியின் வீட்டுக்குள்ளும் புகுந்து அவர்களை அழித்து 'ஆப்ப ரேஷன் சிந்துார்' மூலம் சாதனை படைத்துள்ளார்.

எது நல்லாட்சி என்பதை திருவள்ளுவர், திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார். ஒரு நல்ல மன்னன் என்பவர், அருமையான குடிமக்கள், வலிமையான சேனை, நல்ல விளைநிலம் ஆகியவற்றைக் கொண்டு செயல் பட வேண்டும் என்பதை உணர்ந்து குறள் வழியில் பிரதமர் செயல்படுகிறார்.

பார்லிமென்டில் தற்போது புதிதாக ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதல்வரோ, பிரதமரோ யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறைக்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் பதவியில் தொடரக்கூடாது என்பதுதான் அந்த சட்டம்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல மாதங்கள் சிறையில் அமைச்சராக இருந்தார். இனி அப்படி நடக்காது. அதனால்தான், இந்த சட்டத்தை, ஸ்டாலின், கருப்பு சட்டம் என்கிறார். இருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஸ்டாலினுக்கு, இந்த சட்டம் பற்றி கூற தகுதி இல்லை.

தமிழகத்தில் டாஸ்மாக், எல்காட், போக்குவரத்து, கனிமவளம், ரேஷன் என எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. வேட்டி, சேலை வாங்கியதிலும் கூட ஊழல் செய்துள்ளனர்.

பா.ஜ., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், வரும் 8 மாதங்களில் தொடர்ந்து தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும். தமிழகத்தில் தி.மு.க.,வை வேரோடு பிடுங்கி சாய்ப்போம். இதை சபதமாக ஏற்று செயல்படுவோம்.

'தமிழகத்தில் உதயநிதியை முதல்வராக்க வேண்டும், மத்தியில் ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும்' என்ற ஒரே நோக்கத்தில் 'இண்டி' கூட்டணியினர் செயல்படுகின்றனர். அவர்க ள் எண்ணம் ஈடேறாது.

தற்போது ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்களை பிரதமர் அறிவிக்க உள்ளார். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு சென்றாலே, தே.ஜ., கூட்டணி தமிழகத்தில் கட்டாயம் வெற்றி பெறும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement