13 ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்தில் பாக்., அமைச்சர்

4

டாக்கா: வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான உறவு இல்லாத நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் நேற்று இரண்டு நாள் பயணமாக நேற்று வங்கதேசம் சென்றார்.


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை இந்தியாவுடன் அவர் நெருங்கிய நட்புறவை வளர்த்தார். இதனால் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் இருந்து விலகி இருந்தது.




கடந்த 2012ல் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் வங்கதேசம் சென்றதே, பாகிஸ்தான் தரப்பிலான கடைசி அதிகாரப்பூர்வ பயணம்.

அதன் பின் எந்தவித இருதரப்பு பயணமும் நடக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2024ல் நடந்த மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பதவியை இழந்தார். வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.




இதையடுத்து வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். அவரது அரசில் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அங்கு சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிராக தக்குதல்கள் அதிகரித்துள்ளன.



இந்நிலையில், வங்கதேசத்துடனான உறவை புதுப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இரண்டு நாள் பயணமாக நேற்று வங்கதேசம் சென்றார். வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தவுஹித் ஹுசைன் உடன் இன்று சந்திப்பு நடத்துகிறார். இந்த சந்திப்பில் பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

Advertisement