பிரதமருக்கு விதிவிலக்கல்ல: பதவி பறிப்பு மசோதாவில் மோடியின் நிலைப்பாட்டை விவரித்தார் கிரண் ரிஜிஜூ!

21

புதுடில்லி: ''30 நாட்களுக்கு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதாவில் பிரதமருக்கு எந்த சலுகையும் வழங்க மோடி நிராகரித்துவிட்டார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.



இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி: ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர். நான் அவரை விமர்சிக்க விரும்பவில்லை. பிரதமரை விமர்சித்த போதும், ரபேல் குறித்து முட்டாள்தனமாகப் பேசியபோதும், சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறியபோதும் சுப்ரீம்கோர்ட் அவரை திட்டியது. ஒரு ஜனநாயகத்தில், எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும்.

ஆபத்தான பாதை



எதிர்க்கட்சியின் அடிப்படைக் கடமைகளை அவர்களால் செய்ய முடியவில்லை. ராகுல் மிகவும் ஆபத்தான பாதையில் செல்கிறார். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல இடதுசாரி அமைப்புகள், காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக சதி செய்து வருகின்றன. ராகுலும், காங்கிரசும் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டை பலவீனப்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கவலையளிக்கிறது.

சீர்குலைக்க முடியாது




பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படும் நாட்டை யாரும் சீர்குலைக்க முடியாது. நீதித்துறை மற்றும் தேர்தல் கமிஷனை அவர்கள் பலவீனப்படுத்தும் வகையில் அவர்கள் பேசுகின்றனர். அரசாங்கத்தின் நம்பகத் தன்மையையும் பலவீனப்படுத்த சதி செய்யும் போது, ​​அது கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்கள் இடதுசாரி மனநிலையுடன் செயல்படுகிறார்கள்.


@quote@எதிர்க்கட்சி கேள்விகள் கேட்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டியவர்கள் ஓடிவிட்டால் அரசாங்கம் என்ன செய்யும்? நாங்கள் அவர்களிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டு வருகிறோம்.quote

சிறப்பு சலுகைகள்



30 நாட்களுக்கு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதாவில் பிரதமருக்கு எந்த சலுகையும் வழங்க மோடி நிராகரித்துவிட்டார். பிரதமரும் ஒரு குடிமகன் தான் அவருக்கு எந்த சிறப்பு பாதுகாப்பு இருக்க கூடாது. இந்த மசோதாவில் பிரதமரை விலக்கி வைக்க அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பிரதமர் மோடி ஏற்க மறுத்தார். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Advertisement