அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யு., செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முருகன், ராமமூர்த்தி, அருண்பாலன், கண்ணன், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுந்தரராஜன், பழனிவேல், சந்தானம், பெரியசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன் வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

செயலாளர் பாஸ்கரன் 'கடந்த ஆறு நாட்களாக இரவு, பகல் என மண்டல அலுவலகம் முன்பு சாலையோரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.

போராட்டத்தை அரசு கண்டுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறது.

தொழிலாளர்கள் உரிமைகளை மீட்க, போராட்டத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்க அமைப்பு ஆலோசித்து வருவதாக' கூறினார்.

Advertisement