வான் பாதுகாப்பு கவச சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

புவனேஸ்வர்: ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்
.
போர்க்காலங்களில் எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் முறியடிக்க வான் பாதுகாப்பு கவசம் மிகவும் முக்கியமானது. இந்தியாவுக்கான பிரத்யேக வான் பாதுகாப்பு கவச அமைப்பை உருவாக்க டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் உருவாக்கிய வான் பாதுகாப்பு கவசத்தின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசா சந்திப்பூர் கடற்கரையிலிருந்து ஒருங்கிணைந்த வான்பாதுகாப்பு அமைப்பின் திறனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
@quote@இந்த சாதனைக்காக, டிஆர்டிஓ, ராணுவம் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு வாழ்த்துக்கள். quote
இந்த தனித்துவமான சோதனை நமது நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை வெளிப்படுத்துகிறது. எதிரி ட்ரோன்களின் அச்சுறுத்தலை முறியடிக்க, பாதுகாப்பை பலப்படுத்த உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும்
-
இ. கம்யூ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை அறிக்கை
-
முதல்வரிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி!
-
20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்: திரும்பப் பெற வெண்டும் என்கிறார் சீமான்
-
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: விரைவில் இந்தியா வருகை
-
அரசியல் ஆதாயத்துக்காக அவையை செயல்பட விடாத எதிர்க்கட்சிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு
-
சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி