சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு அறிவிப்பு

புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா. இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரைசதங்கள் உட்பட 7,195 ரன்கள் எடுத்துள்ளார். 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பங்களிப்பு பல போட்டிகளில் இந்திய அணிக்கு இருந்தாலும், சமீபகாலமாக தேசிய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வந்தார்.
தற்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
நான் இந்திய அணிக்காக விளையாடிய நாட்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லா நல்லா விஷயங்களுக்கும் ஒரு நாள் முடிவு இருக்கும், நன்றி,'' என குறிப்பிட்டுள்ளார்.



மேலும்
-
இ. கம்யூ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை அறிக்கை
-
முதல்வரிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி!
-
20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்: திரும்பப் பெற வெண்டும் என்கிறார் சீமான்
-
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: விரைவில் இந்தியா வருகை
-
அரசியல் ஆதாயத்துக்காக அவையை செயல்பட விடாத எதிர்க்கட்சிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு
-
சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி