பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
திட்டக்குடி : குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த தொ.செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி, 30; இவரது மனைவி கமலா, 25; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 18ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கமலா, வீட்டில் வயலுக்கு வைத்திருந்த களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்பது குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு அறிவிப்பு
-
வான் பாதுகாப்பு கவச சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
-
வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
-
சாம்பிராணி ஏற்றுவது எதற்காக?
-
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!
-
டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; நிக்கி ஹாலே